Saturday, November 3, 2018

திருதராஷ்டிரன் காணும் கனவு



அன்புள்ள ஜெ

<‘குடிலுக்குள் கிடந்த அவருடைய பேருடலை அவன் எட்டிப்பார்த்தான். “பேருடல், விழியின்மை. அவர் கொண்டுவந்த அனைத்தும் இங்கு இவ்வண்ணம் ஆகி நின்றிருப்பதற்காகவே போலும்.”’>

இந்த வரியை படித்தபோது ஒரு நொடி திருவரங்கம் பெருமாள் நினைவில் வந்தது. விஷ்ணு காணும் கனவும் திருதராஷ்டிரன் காணும் கனவும் ஒன்றுதான் என்று தோன்றியது. 

சஞ்சயன் கனவுக்குள் அவன் அர்ஜுனனாகவும் திருதராஷ்டிரர் கிருஷ்ணனாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ? அதன் உன்னத வடிவத்தையே கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறானோ?

மது