Saturday, November 3, 2018

உரையாடல்



ஜெ

சஞ்சயனுக்கும் திருதராஷ்டிரனுக்குமான உரையாடல் மீண்டும் நிகழ்வதில் மகிழ்ச்சி. சஞ்சயன் இப்போது திருதராஷ்டிரனுக்கு இந்தக்கதைகளை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்பது இப்போதுதான் ஞாபகம் வந்தது. அவன் இன்னும் இன்றைய நாளை ஆரம்பிக்கவில்லை. அவன் குளிக்கப்போகிற இடத்தில் ஞாபகம் வைத்துக்கொண்டவற்றை யோசிக்கிறான். அவன் எண்ணுவன நிகழ்ந்து நாட்களாகின்றன. அதேபோல அவன் திருதராஷ்டிரரை எழுப்பவில்லை. எழுப்புவதாக கனவுதான் காண்கிறான். இந்த அத்தியாயத்தின் குழப்பம் ஒரு கனவுமாதிரி இருந்தது. அதிகாலையில் அத்தனை போர்களுக்குப்பின்னாடி களைப்புடன் மயக்கத்துடன் நடப்பதும் நடந்ததும் கனவும் குழம்பிக்கிடக்கும் சஞ்சயனின் உள்ளம் தெளிவாகவே தெரிகிறது. அவன் பார்க்கும் அந்தப்போரும் அதேபோலக் குழம்பித்தான் கிடக்கின்றன என நினைக்கிறேன்

செல்வா