அன்புள்ள ஜெ
யதார்த்தமான வரிகளில் சுருக்கமாக சொல்லப்பட்டுக்கொண்டிருந்த
போருக்கு நடுவே திடீரென்று வந்த திருதராஷ்டிரரின் அத்தியாயம் அடுத்த தளத்தில் உள்ளது.
இவ்வளவு பெரிய போரை பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயன் என்ன பார்த்தான்? அவனுடைய சொற்கள்
வழியாக அவர் என்ன கேட்டார்? அவர்களின் மனம் நிலையில் நின்றிருந்ததா? அந்தச்செய்திகளை
இந்த அத்தியாயத்திலே பார்க்கமுடிந்தது. எல்லா வரிகளுமே கவித்துவமான அர்த்தங்களுடன்
இருப்பதைப்போல தோன்றியது.
ஒவ்வொன்றும் தங்களுக்குள் உறையும் அறியமுடியா விசையொன்றை குவிப்பதே கூர். கூர்வனவற்றில்திகழ்கின்றது தெய்வங்கள் கொள்ளும் வெறி. என்ற வரி சிலிர்க்க செய்தது.
அந்தப்போரை அவன் கூர்முனைகளுக்கு ஃபோகஸ் செய்து பார்ப்பதும் அந்த கோணத்தில் அர்த்தம்
மிகுந்ததாக ஆகிறது. கூர்மை என்பதை இப்படி ஒரு கவிதையாக நான் சிந்தனைசெய்து பார்த்ததே
கிடையாது
ஆனந்த்