Sunday, November 4, 2018

போர்மழை




விண்ணிலிருக்கும் வெள்ளங்களின் ஒரு திவலையே மண்ணில் மாமழை என பெய்கிறது என்பார்கள். இப்போரும் ஒரு துளித்தெறிப்பு மட்டுமே என திருதராஷ்டிரர் சொல்கிறார். விண்ணில் ஆபஸ் என்னும் தூய வெள்ளம் நிறைந்துள்ளது என்பதும் மண்ணிலிருந்து அதற்குத்தான் அவிஸ் அளிக்கிறார்கள் என்பதும் அங்கிருந்து பெய்வதுதான் மழை என்றும் வேதம் சொல்கிறது. அந்த உண்மையுடன் இணைத்து வாசிக்கையில் இந்த வரி மிகப்பெரிய அர்த்தம் கொள்கிறது. விண்ணிலிருந்து மழை பெய்யும் என்றால் இந்தப்போரும் அங்கிருந்துதானே பெய்யும். அது விண்ணின் கருணை என்றால் இதுவும் விண்ணின் கருணைதானே? இந்த மழையும் தெய்வங்களால் அருளப்பட்டதுதானே?
சாரங்கன்