Wednesday, November 7, 2018

முள்



“எதற்காக முந்துகிறீர்கள்? மைந்தர் களம்படுவதைக் காணவா?” என்று அவன் கேட்டான். 

என்ற  வரிக்கு முன்னால் இந்த வரிகள் வருகின்றன

காலையில் நீராடச் சென்றபோது ஓடைக்கரையருகே மலர்ந்திருந்த சிறு பூ ஒன்றை பறித்தெடுத்தான். தண்டில் அது பூமுள் கொண்டிருந்தது. மிக மெல்ல அதை தன் விரலால் தொட்டு அந்த உச்சத்தை உணர்ந்தான். குளிர்முனைகொண்ட வேல் ஒன்று அடிவயிற்றில் இறங்கிச் செல்வதும் அதுவும் நிகரே.

ஒவ்வொன்றும் தன் வஞ்சத்தையே கூர்மையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. கூர்மை என்பது தன்னைக்குவித்து ஒற்றைப்புள்ளியில் ஆற்றலை செலுத்துவது. சஞ்சயனின் சொற்களில் தெரிவதும் அந்தக்கூர்மைதான். அது பூவிலிருக்கும் முள்போல திருதராஷ்டிரனை குத்துகிறது


பாஸ்கர்