Thursday, November 8, 2018

சிறுதெய்வங்கள்


அன்புள்ள ஜெ


திசைதேர்வெள்ளம் 59 - குளிகன் மாதி  எல்லாம் தென்னகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பழங்குடிகளின் தெய்வங்கள் அல்லவா? சஞ்சயன் அதே பெயர்களை மாகிஷ்மதி அரக்கர்களின் தெய்வங்களாக சொல்கிறான்.

அவை வடமொழி பெயர்களா? அவை வடஇந்திய நிலத்து தொல்லரக்கர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று கருத இடமுள்ளதா?

நன்றி
மது

அன்புள்ள மது
அந்தப் பெருங்கனவில் எவரும் எதுவும் வரமுடியும். இந்தியா முழுக்கவே ஒன்றுதான்
ஆனால் குளிகன் மாதி [மாஹ்தி] எல்லாமே சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. அதை நானே இப்போதுதான் அறிந்தேன். அவை சிவனின், தேவியின் பரிவாரதெய்வங்கள் பட்டியலில் உள்ளன. இதை எப்படி பழங்குடிகள் வழிபடுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்

ஜெ