Thursday, November 8, 2018

துன்பங்கள்



சிற்றறிதல்கள் அனைத்தும் இன்பங்கள். பேரறிதல்களோ கொடும்வலிகள்.  தவமென்பவை தற்கரைத்து அடையத்தக்கவை என்ற சஞ்சயனின் வரிகள் ஆழமானவை. பெரிய அனுபவங்கள் என்பவை நமக்கு மிகப்பெரிய படிப்பினைகளை அளிப்பவை. அவை எல்லாம் பெருந்துன்பமாகவே வந்துசேர்கின்றன. இன்பம் என்பது ஒரு சின்ன களியாட்டம். அதிலிருந்து நாம் எதையுமே பெரிதாகக் கற்றுக்கொள்வதில்லை. துன்பங்களில் இருந்தே கற்றுக்கொள்கிறோம். சிறிய அறிதல்களில் இருக்கும் இன்பம் என்பது நாம் அதை கடந்துபோவதனால் உருவாவது./ஆகவே இன்பங்கள் எல்லாமே கொஞ்சநேரம்தான். ஆனால் துன்பம் ஆழமானது. அதில் நாம் தங்கிவிடுகிறோம். கற்றுக்கொண்டபின்னர்தான் கடந்துசெலுகிறோம். ஆகவே எல்லா துன்பங்களும் தவங்கள்தான்


அருண் எஸ்