ஜெ
எல்லா அர்த்தங்களையும் அழித்தாகவேண்டும் என்று போர்
கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது. விந்தன் அனுவிந்தனின் சாவுக்குப்பின் நினைத்துக்கொள்கிறான்.
வஞ்சத்தை மறந்து தம்பியை உளமாரத் தழுவிக்கொண்டது எவ்வளவு நன்று என்று. அப்போது அவன்
செத்திருந்தால் எல்லாமே அர்த்தமுள்ளவையாக ஆகியிருக்கும். ஆனால் அவன் தம்பி செத்த களத்திலிருந்து
சுயநலமாக திரும்ப நினைக்கும்போது சாவுகிறான். அதுவரைக்கும் அவன் கொண்ட நெகிழ்ச்சிகள்
உன்னதங்கள் எல்லாமே அபத்தமாக ஆகிவிடுகின்றன. வெண்முரசில் நம்முடன் விளையாடி நம்மைக்
கேலிசெய்யும் சில காட்சிகள் உண்டு. அதிலொன்று இது என நினைக்கிறேன்
முகுந்தராஜ்