Friday, November 2, 2018

நொடி




ஜெ

விந்தனுக்கும் அனுவிந்தனுக்கும் இடையே உள்ள அந்த உறவுக்கு ஒருகணம் என தலைப்பு வைத்து ஒரு நல்ல குறுநாவலாக ஆக்கிவிடலாம். அவர்கள் இருவரிடையே இருந்த இடைவெளி என்பது ஒருநிமிடம்தான். அந்த நிமிடத்தை முதலில் வஞ்சத்தால் நிரப்பி வைத்திருந்தான். அதன்பின்னர் அன்பினால் நிரப்பினான். அதன்பின்னரும் அந்த இடைவெளி இருந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு கணத்துக்கு என்ன அர்த்தம் என்ரு அவனுக்குத்தெரியவில்லை. அவன் அனுவிந்தனின் சாவுக்குப்பின் வாழ்வது ஒரு நொடிதான். அதாவது திரும்பிவிடுவோம் என நினைக்கும் அந்த நொடி. அதற்குள் வேல் வந்து பாய்ந்துவிடுகிறது. அந்த ஒரு நொடி வேறுபாட்டுக்கு என்னபொருள் என்று கடைசிவரை கதை சொல்லவே இல்லை

சாரங்கன்