Saturday, November 3, 2018

காவியம் எனும் கடிதம்

காவியம் சுசித்ரா

அன்புள்ள ஜெ

காவியம் என்னும் கட்டுரை- கடிதத்தை பலமுறை வாசித்தேன். சுசித்ரா அவர்கள் அருமையாக எழுதியிருந்தார். மொத்த நாவல்தொடரையும் ஒரு குறிப்பிட கோணத்தில் அணுகுவதற்கான திறப்பாக அது அமைந்திருந்தது

நான் கல்லூரியில் இலியட் படித்தேன். அப்போது ஆசிரியர் அதிலுள்ள எபிக் குவாலிட்டி என்பது அது ஒரு தராசில் இரு தட்டுகள் போல ஒரு பெரிய வேல்யூவை நிறுவும்போதே இன்னொரு தட்டில் அந்த வேல்யூவை ஐரனியாக மாற்றியும் காட்டிவிடுகிறது என்று சுட்டிக்காட்டினார்

இது எபிக் குவாலிட்டி என்றால் வெண்முரசில் இதைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அர்த்தமும் அர்த்தமில்லாமையும் வந்துகொண்டே இருக்கின்றன.எ ந்த ஒருவிஷயமும் நிலைநாட்டப்பட்டதுமே அதுக்கு மறுபக்கமும் சுட்டிக்காட்டப்படுகிறது

இன்றைய அத்தியாயங்களில் வந்த விந்தன் அனுவிந்தன் கதை அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது


ஆர்.சத்யமூர்த்தி