Tuesday, November 6, 2018

தாமரைத்தடாகம்



இன்று 

ஆமையோட்டின் அடிப்பகுதியே பாதுகாப்பற்றது. ஆமையை உப்பக்கம் காணச்செய்யவே எவ்வேட்டை விலங்கும் முயலும். ஆமையின் தலை வெளியே வருகிறது. ஆமையின் வலப்பக்க மூலையில் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இணைந்து தாக்குகிறார்கள்.   

அன்று 

அபிமன்யு சொன்னான். “நான் தாமரைமலரை வாளால் வெட்டுவேன். பெரிய வாளால் வெட்டுவேன்.” சுருதகீர்த்தி “நாங்கள் இருவரும் வெள்ளைக்குதிரையில் போய் பெரிய தாமரை மலர்களை வெட்டுவோம். அந்தக் குளத்தில் முதலைகள் இருக்கும். நூறு முதலைகள்… ஏழு முதலைகள். அவற்றின் வாய்க்குள் பெரிய பற்கள். குறுவாள் போன்ற பற்கள்!” என்றான். 

பால்யத்தில் இந்த கற்பனை தாமரைத் தடாகத்தில் போர் செய்துகொண்டிருக்கும்போதே அர்ஜுனன் இவர்களை காண்டீப கோவிலுக்கு அழைத்துச் சென்று காண்டீபத்தை காட்டுகிறான் .

இப்போது இவர்கள் ஆடும் இந்த தடாகத்தில் ஒரு ஆமை இருக்கிறது .ஒற்றை ஆமை .பீஷ்மரை தலை என கொண்ட ஆமை

கடலூர் சீனு