ஜெ
கண்களை இரு நீர்த்துளிகள் என்று சஞ்சயன் உணருமிடம் அழகானது. ஒரு புல்துளியில் அசைந்துகொண்டே இருக்கும் பனித்துளிகளைப்போன்றவை அவை. இந்த அசையும் பனித்துளிகளால் தான் நிலையானது என நாம் நினைக்கும் இந்த பூமி உருவாக்கி நமக்குக் காட்டப்படுகிறது
முன்பு ஒரு உபன்யாசத்தில் புலவர் கீரன் சொன்னார். இந்த மேடையில் இருந்து பார்க்கும்போது அரங்கிலே ஆளுக்கொரு கண்ணாடி போட்டிருக்கிறீர்கள். அப்படியென்றால் நாம் ஆளுக்கொரு அரங்கத்தைத்தானே பார்க்கிறோம். இதுவே மாயை என்று
அந்தப்போர்க்களம் சஞ்சயனால் பார்க்கப்படவில்லை. வெளியே இரு நீர்த்துளிகளாக இருக்கும் ஆடிகளால் அது மாற்றிக்காட்டப்படுகிறது. அது அவனே உருவாக்கிக்கொள்ளும் போர்க்களம்
சக்திவேல்