Monday, November 5, 2018

நீலம் பற்றி




அன்புள்ள ஜெ]

நீலம் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். எனக்கு அது ஒரு செய்யுள் போன்று தோன்றியது. இருபதுமுறையாவது சில அத்தியாயங்களை வாசித்திருப்பேன். அவை எனக்கு அர்த்தமாகவே இல்லை. அந்த சொற்களில் உள்ள musicality எனக்குப் பிடித்திருந்தது. அதைத்தான் வாசித்தேன். அதோடு ஆங்காங்கே வரும் உதிரிவரிகள் ஏதோ ஒருவகையான தாபத்தையும் ஏக்கத்தையும் கொண்டிருந்தன. ஆகவே அவற்றை வாசிக்க வாசிக்க பிடித்திருந்தது. நீலம் என்ன சொல்கிறது அதன் கொள்கை என்ன என்றெல்லாம் நிறைய கட்டுரைகளை வாசித்தேன் அவையெல்லாம் எனக்கு எந்தவகையிலும் புரியவில்லை. ஆனாலும் இதை வாசிக்காமலும் இருக்கமுடியவில்லை. இன்னொரு காலத்தில் இதெல்லாம் எனக்குப் புரியும் என நினைக்கிறேன்

எஸ்.சாந்தி