நலந்தானே?
திசைதேர் வெள்ளம் ஆரம்பித்ததிலிருந்து ஒரே கொந்தளிப்பாகவும், பெருந்துக்கமாகவும் போய்க்கொண்டிருக்கிறது. கொல்ல வரும் பீமனை, ”மூத்தவரே” என அலறி அழைக்கும் தீர்க்கபாகுவின் குரல் மிகவும் தொந்தரவு செய்கிறது. நேர மாறுபாட்டின் காரணமாக அடுத்த நாளின் அத்தியாயம் முன் நாள் இரவு 9:30 மணிக்கே படிக்க முடிவதால் என் பெரும்பாலான இரவுகள் கனத்து விட்டன. முன்னர் போரைத் தவிர்க்க அல்லாடும் அன்னையரின் சொற்களில் இருந்தும், போரை விழையும் தந்தையரின் சொற்களில் இருந்தும் உருவகித்திருந்த போரை விட குருக்ஷேத்திரப் போர் மிகவும் உக்கிரமாகவும்,விவரணைகள் கூர்மையாகவும் உள்ளன. மனிதருடன் சேர்த்து கொல்லப்படும் விலங்குகளுக்காகவும் மனம் கலக்கமடைகிறது.
கணேசமூர்த்தி