Tuesday, November 6, 2018

வெண்முரசின் ஒட்டுமொத்த அமைப்பு பற்றிய கட்டுரைகள்


காவியம் சுசித்ரா

வெண்முரசின் கட்டமைப்பு


அன்பின் ஜெ,

வெண்முரசின் ஒட்டுமொத்த அமைப்பு பற்றி தொடர்ந்து வரும் கட்டுரைகள் நன்றாக உள்ளன. ஆனால் ஏமாற்றம் என்னவென்றால் இதுவரை வந்த கட்டுரை எதுவும் இந்த ஆக்கத்தில் இந்திய தத்துவம் கையாளப்பட்ட விதத்தின் ஒட்டுமொத்த பார்வையை அளிக்கும் விதத்தில் இல்லை என்பது. 

ஓர் எடுத்துக்காட்டு, வெண்முரசு முழுவதுமே இளைய யாதவர் வேதாந்தத்தையும் நாராயண வேதத்தையும் நிறுவுவதன் கதையாக வருகிறது. ஜனமேஜயனும் வேதாந்த தரிசனத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால் ஆஸ்திகன் ஜனமேஜயனை சாங்கிய தரிசனத்தின் அடிப்படையில் வாதிட்டு வென்று அவனுடைய சர்ப்பசத்ர யாகத்தை நிறுத்துகிறான். முதற்கனலில் பிரபஞ்ச பிறப்புக்கதையும் சாங்கியத்தின் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது. இது ஏன் என்று யோசித்திருக்கிறேன். இதுபோன்ற கேள்விகளையும் ஒட்டுமொத்த மேக்ரோ பார்வை கட்டுரைகள் கையாளவேண்டும் என்று நினைக்கிறேன் 

பாலகுமார் 

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்