அன்புள்ள ஜெ
வெண்முரசின் இந்தப்போர்க்களக்காட்சி
சஞ்சயன் சொல்லும்போது இன்னொரு பெரிய வடிவத்தை எடுத்துவிடுவதைக் காண்கிறேன். இங்கே போரில்
எல்லா தெய்வங்களும் வந்து நின்றிருக்கின்றன. தெய்வங்களின் போரினால் உருவாக்கப்பட்டதுதான்
இந்த பிரபஞ்சமே என்னும் எண்ணம் ஏற்படுகிறது
திசைதேர்வெள்ளம்
வாசிக்கையிலேயே இந்த எண்ணம் வந்தது. அதாவது உண்மையில் இந்தப்போரே எட்டு வசுக்களின்
போர். நிலம் நீர் காற்று வானம் ஆகிய எட்டு எலிமெண்டுகள் நின்று போரிட்டுக்கொண்டிருக்கின்றன
அவை விலகியபின் மனிதர்கள் போரிடுகிறார்கள்
சண்முகம்