அன்புள்ள ஜெயமோகன் அண்ணா ,
இதயபூர்வமான வணக்கங்கள் .
நீலம் தொடர்ந்து படித்துவருகிறேன் ( மூன்றுநாட்களுக்கு ஒருமுறை
சேர்த்து )... கண்ணனை கார்முகில் வண்ணனை கண்முன் நிறுத்தும்
ஆயிரம் தருணங்கள் நிறைந்த கதையாடல் .....
ஆனந்தமய பெருஞ்சுழி. ஆயர்குலமெனும் நெற்றியிட்ட நீல நறுந்திலகம். பனிமலையடுக்குமேல் உதித்தெழும் பால்நிலவு. மண்ணை ஒளியாக்கும் விண்ணின் ஊற்றுமுகம். ஐந்து பசுக்களும் பால்கனிந்து பெருகி கலம் நிறைக்கும் சிறுகன்று...
இந்த வரிகள் ... திசையுள் மான்,மழைத் துளி வீழ்ந்தெழும் மண் புகை ,தீக்குச்சி உரசும் .....(அதற்குமேல் மறந்துவிட்டது ) கணப்பொழுது நிகழ்வுகளை குறித்த பிரமிள் கவிதை மொழியினை ஞாபக படுத்துகிறது ..
வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை ...நெகிழ்ச்சியாய் இருக்கிறது உடனடியாக நடனமாடவேண்டும் என தோன்றுகிறது .
உங்களுக்கும் ,குடும்பத்தார்க்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் .... நான் ஆழப்புழாவை நோக்கி பாம்பு படகு போட்டியைக்கான செல்கிறேன் .
சுதாகர்