Thursday, September 11, 2014

சொல்பெருகுதல்

ஜெ,

இன்றைய அத்தியாயம் மீண்டும் கண்ணனை குழந்தையாகக் காணவைத்தது. நானே நினைத்துக்கொண்டிருந்தேன். அன்னையர் கண்வழியாக கண்ணன் வரவில்லையே என்று.அதேபோல பாகவதத்தில் ஏராளமான அரக்கர்களையும் காணவில்லையே என்ன செய்யப்போகிறார் என்று நினைத்தேன்.

அற்புதமாக இணைத்துவிட்டீர்கள். அரக்கர் கதைகள் எல்லாமே அன்னையர் சொல்லிச் சொல்லி உருவாக்குவது. மோர் நுரைக்க மத்து கடைவதுபோல அவர்கள்  கண்ணனை கதைகளாக பெருகவைக்கிறார்கள். வெண்ணை போல ‘மெய்ப்பொருளை’ கடைந்து எடுக்கிறார்கள். புராணங்களுக்கு இதைவிட சிறந்த உவமை வேறு கிடையாது. அதற்கான தலைப்பும் சிறப்பு - சொல்லாயிரம். சொல்லமுடியாது போனால்தான் சொல்லாயிரம்

பாதப்பொதுப்பு, புறங்கையின் கதுப்பு- அற்புதமன சொல்லாட்சிகள். இவற்றை தமிழிலக்கியத்தில் இதன்முன்னால் எவரேனும் சொல்லியிருக்கிறார்களா? தெரியவில்லை


சுவாமி