Monday, September 8, 2014

விழி

ஜெ,

முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்


என்ற முதல் வரி முதல்

ஆடையின்றி நோக்கி நீ அடைவதுதான் என்ன?” என்று சினந்து கேட்டாள் ரங்கதேவி. கண்களில் குறுநகை ஒளிர “கண்கள்” என்றான் கண்ணன்.

என்ற வரி வரை ஒரே நேர்கோடு.  என்ன ஒரு துல்லியம். ஒவ்வொரு சொல்லும் ஆயிரம் முறை திட்டமிட்டது போல்
சுவாமி


அன்புள்ள சுவாமி

பல்லாயிரம் முறை திட்டமிட்டதுதான். சென்ற இருபதாண்டுகளாக. திட்டமிட்டது அந்த பழம்தின்னா பறவை

இந்த தீனிப்பறவை அதை எழுதியது நேற்று. முடித்தது மாலை. அதன்பின்னர்தான் சண்முகவேல் வரைந்தார்

நீலம் அளவுக்கு இப்படி நெருக்கடியாக எழுதிச்செல்லும் ஒரு படைப்பும் இல்லை.

ஜெ


ஜெ,

உடலான நாள் முதல் ஒருநாளும் அறியாத விடுதலை. எதனால் கட்டுண்டோம் என்று அறிந்தன உடல்கள். எதையுதறி எழவேண்டும் என்று அறிந்தன நெஞ்சங்கள். எதுவாகித் திளைக்கவேண்டும் என்று அறிந்தன ஆழங்கள். 

ராசலீலா என்றால் இதுதான் 

சுவாமி

அன்புள்ள சுவாமி,

ராஸம் என்னும் யோகமே அதுதான். நிர்வாணம்

ஜெ