Friday, December 25, 2015

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3



இனிய ஜெயம்,

வண்ணக் கடலில் ஒரு சித்திரம். கர்ணன் சத்ரியன் ஒருவனை வெல்லுகிறான்.

அவன் '' எனது நாட்டைக் கொண்டு நீ ஆட்சி, அரியணை என அமைந்து விட முடியாது. சூதன் மகனுக்கு எதிராக பிற சத்ரிய குலங்கள் சும்மா இருக்காது''

கர்ணன் '' ஒரு சூதனின் முன் தோற்ற அக் கணமே நீ கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்திருந்தாய் எனில் நீ சத்ரியன். இப்போது நீ வெறும் இழி மகன். இழிமகனின்  நாட்டை எடுத்துக் கொள்ளும்  கீழ்மையை ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்''

இப்படிப்பட்ட கர்ணனுக்கு அவன் முன் சிரம் பணிந்து அங்க நாட்டை அளிக்கிறான் துரியன். அங்க நாடு அதில் உள்ள புழு பூச்சி முதல் புழுதி வரை கர்ணனுக்கு உயிரினும் மேலான துரியனால் கிடைத்த பரிசு.  நஞ்சே பெய்யினும் உவந்து கொள்ளும் நயத்தக்க நாகரீகம் கொண்டவன் கர்ணன். ஆக அவன் தேசத்தில் அவனை சூழும் எந்த அவமதிப்பும் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அது அவனை ஒரு போதும் தீண்டவும் செய்யாது. சூரியனைத் தீண்டிய பனித்துளி ஒன்றுண்டா என்ன?

ஆனால் வ்ருஷாலினி, அவன் தேர்ந்தது. அல்லது அவனுக்கு நேர்ந்தது. 

தாதி. சூதப் பெண் அது ஒன்றே போதும் அவளுக்குள்ளிருந்து ராதையை கர்ணனால் கண்டு விட முடிகிறது.

''அரசன் ஆணையாக அல்ல, உன் மைந்தனாக கேட்கிறேன் சொல்''

ராதேயன் ராதேயன் என இந்த இடத்தில மனம் பொங்கியது.

அனால் தாதி ''அரசே எனத் துவங்கி சேதியை சொல்லி,[ கர்ணனின் விழைவை] ஆணை''என்றே முடிக்கிறாள்.  மகன் என்ற உரிமை மூலம் கர்ணனை சூதன் மகனாக்க  விரும்பாத தாய்.

இத்தனை மேன்மைக்களுக்கு இடையில்தான் கீழ்மை நுழைந்து வந்து ஒவ்வொரு கணமும் கர்ணனை தீண்டுகிறது.

சூரியனின் மைந்தன், கொடுத்துச் செல்ல மட்டுமே இங்கு வந்தவன் மேலோர் கோன், வ்ருஷாலினிக்கு இவன் யார்?  அரியணை அமரும் விந்தினை பீச்சத் தகுதி கொண்ட வெறும் நிமிர்ந்த குறி மட்டும்தானா
 
கடலூர் சீனு