பரசுராமர் நேற்று வந்த உடனே எனக்கு வண்டு ஞாபகம் வந்தது.. கர்ணன்னையும் பரசுரமாரயையும் இணைப்பது வண்டு தானே.. இன்று அதுவே தம்சன் உருவில்..
“நாம் இருவரும் இணைந்து அறியும் ஒன்று நம்மை அணுகும். அதுவரை என்னுடன் இரு”
பரசுராமனிடம் இருந்தது பெரும்கோபம். தம்ஸனிடம் இருந்தது பெரும் காமம். அது இரண்டும் இணையும் தருணம் கர்ணன். இந்த வண்டு தான் கர்ணனின் தொடையில் இறங்கி பரசுரமாரின் சாபம் வர காரனமாகி இருந்தது.
சாங்கிய தரிசனத்தில் முக்குணங்களும் சரி சமானமாக இருந்தன, ஒரு தருணத்தில் அது குறைய பிரபஞ்சம் உருவாயிற்று என்று வரும். அறிவியலும் ஏதோ ஒரு மின்னல் மூலமாக தான் முதல் உயிர் பிறந்திருக்கும் என கருதுகிறது. தம்சன் மின்னல் ஒளியில் கிவாகியை பார்ப்பது, காமமே பிரபஞ்ச உருவாக்கதிற்கு காரணம் என சொல்லாமல் சொல்கிறது.
இந்த முறை ஓவியத்தை பார்க்காமல் எந்த காட்சி வரையபட்டுஇருக்கும் என ஆவலாக இருந்தேன்.. மிக சரியாக அதே காட்சி... அந்த ஓவியத்தின் பிரம்மான்டம் அந்த பிரபஞ்ச காட்சியை நேரில் பார்ப்பது போல இருந்தது.. நன்றி ஷண்முகவேல்
ரகுராமன்