ஜெ
அர்ஜுனன் ஒரு சுத்த
வீரன் என்ற மனச்சித்திரம்தான் இருந்தது. அவன் அரசாங்க உரிமைக்காக சகோதரர்களிடம் போராடுகிறான்
என்றும் போர்க்களத்தில் திடீரென்று அவனுக்கு ஒரு தனியான உணர்வு ஏற்பட்டது என்றும் தோன்றியிருந்தது.
அல்லது நம்மூர் கதைகள் அந்தவகையானச் சித்திரங்களைத்தான் நமக்கு அளிக்கின்றன
காண்டீபம் வாசிக்கும்போதுதான்
அவனுக்கு முன்னரே உண்மையை ஊடுருவிச்சென்று பார்க்கும் கண்கல் இருந்தன என்ற உண்மை தெரிகிறது.
அவன் செய்த பயணங்கள் எல்லாமே யோகப்பயணங்கள் என்ரு தெரிந்தது. அவன் ஒரு யோகி என்று புரிந்துகொண்டேன்
அந்த வகையில் பார்க்கும்போது
கீதாமுகூர்த்தம் என்பது சாதாரணமானது இல்லை. அது ஒரு பெரிய கணம். அதாவது கனி உதிருவது
ஒரு கணத்தில்தான் ஆனால் அதுவரை அது மொட்டாகவும் குரும்பையாகவும் காயாகவும் இருந்து
கனிந்து வந்திருக்கிறது
மனோகரன்