அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம்,வெய்யோன்
படிக்க படிக்க உங்கள் மொழி வெள்ளத்தில் அப்படியே அடித்து செல்லபடுகிறேன்,
சூதர்கள் கதை சொல்ல கர்ணன் கேட்பது,காண்டவம் தொடக்கத்தில் சூதர்களிடம்
திரௌபதி கதை கேட்பதை ஞாபகபடுத்தியது.
கர்ணன் ,அர்ஜுனனின்
கண்ணாடியின் எதிர் பிம்பமாய் தெரிகிறான்,காண்டீபத்தில் சாபம் வாங்கி
பொன்வண்டாக வந்தான் சித்ரரதன்,இங்கே சாபம் பெற்று கருவண்டாக வருகிறான்
தம்சன்,அங்கு கந்தர்வன்,இங்கு அரக்கன்,வலக்கையில் குருதியும், இடக்கையில்
நெருப்புடன் வந்து சித்ரரதனுக்கு விடுதலை அளித்தான் அர்ஜுனன்,இங்கு
வலத்தொடையில் அக்னி வடிவான பரசுராமர்,இடத்தொடையில் குருதி வழிய தம்சனின்
விடுதலைக்கு வித்திடுகிறான் கர்ணன்.
அங்கு
அறியாதவற்றையும் காண்பாய் என்று அர்ஜுனன் வரம் பெற்றான்.இங்கு அறிந்தவற்றை
மறப்பாய் என்று சாபம் கொண்டான் கர்ணன்.அர்ஜுனன் குளிர் மழை தெய்வத்தின்
மகன்.கர்ணன் காயும் கதிரவனின் மைந்தன்,என்ன ஒரு முரண் இருவருக்கும்.
இப்படிக்கு,
குணசேகரன்.