ஜெ
மகாபாரதத்தில்
மிகப்பெரிய பெண் வில்லாளிகள் என எவருமில்லை என நினைக்கிறேன். வில்வித்தை என்பது வளைதலின்
கலை என்று அர்ஜுனன் சொல்கிறான். பெண்ணாக ஆனபின்னர்தான் அவன் மிகப்பெரிய வீரனாக ஆகிறான்.
அப்படியென்றால் அவன் போல பெண்கள் ஏன் பெரிய வில்வித்தைக்காரிகள் ஆகவில்லை? அவன் சித்ராங்கதைக்கும்
சுபத்திரைக்கும் சொல்லிக்கொடுக்கிறான். ஆனால் அவர்களும் வில்லாளிகள் ஆகவில்லையே?
வில்வித்தைக்குத்தேவை
முனைப்புள்ள குறிநோக்கும் பழக்கம். பெண்களுக்கு அப்படி ஒற்றைக்குறியில் தன்னை சுருக்கிக்கொள்ளமுடியாதா
என்ன? மகாபார்தத்தில் பெரிய வில்வித்தைப்பெண்கள் இல்லை என்னும்போது வேறு நூல்களில்
தேடவேண்டிய தேவை இல்லை. வில் என்பதே ஆண்களின் ஆயுதம்தான்போல
ஜெயராமன்