ஜெ
“கருக்குழியில் என்னை வைத்து
இரு காலிடைக் குழியில் ஈன்று
முலைக் குழியிலெனை அழுத்தி
இப்புவிக்களித்தாய் நீ.
உன் குருதியில் எழுந்த குமிழியென்பதால்
நான் உனக்கு கட்டுப்பட்டவன்.
அன்னையே!
அதனாலேயே நீ எனக்கு கட்டுப்பட்டவளும் கூட.
தொடக்கத்திலேயே நெருப்பாக எரியத்தொடங்கிவிட்டது
வெய்யோன். தலைப்பே சொல்லிவிட்டது நாவலின் அனலை. வரிகளும் அதையே சொல்கின்றன. நீங்கள்
இந்த ஒரு மொழிநடையை மட்டும்தான் தியானித்து எடுக்கிறீர்கள் என நினைக்கிறேன். மற்றதெல்லாம்
அதுவாகவே வருகின்றன இல்லையா?
சுவாமி