Monday, December 14, 2015

மையம்



அன்புள்ள ஜெ,

வணக்கம்

வெண்முரசு நாவலை தொடர்ந்து பல பகுதிகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய தனிமை வந்துவிடுகிறது. நான் தனியாக வேறு ஓர் உலகில் வாழ்வதுபோலவும் இங்குள்ளவர்களுக்கும் அதற்கும் சம்பதமில்லை என்பதுபோலவும் தோன்றுகிறது. இந்தத்தனிமையுணர்ச்சி எனக்கு ஒரு தியான அனுபவத்தை அளிக்கிறது. எல்லாவற்றையும் புதியகோணத்தில் பார்ப்பதற்கு நான் பழகியிருக்கிறேன் என நினைக்கிறேன்

வெண்முரசின் மையமாக வெவ்வேறு மனிதர்கல் வந்தார்கள். ஆனால் கடைசியில் கிருஷ்ணன் மையமாக ஆகிவிட்டான். கிருஷ்ணன் வந்தபின்னர் மையம் மாறுபடவே இல்லை. கிருஷ்ணனைச்சூழ்ந்தே எல்லாவிஷயங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. கிருஷ்ணன் நேரடியாக வராத இடங்களிலும் கூட அவரே மையமாக இருக்கிறார்

கிருஷ்ணனை அவரது mightiness ஐ புரிந்துகொள்ள வைப்பதே வெண்முரசு நாவல்களின் முக்கியமான சாதனை என நினைக்கிறேன்


சண்முகராஜ்