Friday, December 25, 2015

குளிரும் வெம்மையும்



ஜெ,

வெண்முரசில் அணுக்கர்களுக்கும் அரசர்களுக்குமான உறவு ஓர் அற்புதம். திருதராஷ்டிரனுக்கும் விப்ரருக்குமான உறவு அதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஆனால் அது எல்லாருக்கும் அமைவதில்லை. மிகச்சிறந்த அணுக்கர் என்பவர் உண்மையில் அந்த அரசரின் தகுதிக்கு ஏற்றவகையிலேயே அமைகிறார்கள் என நினைக்கிறேன்.

கர்ணனின் அணுக்கரான சிவதர் கனிந்த தந்தையைப்போல அவனுடன் இருக்கிறார் என்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரை அவன் ஒரு தந்தையைப்போலவே நடத்துவதும் அழகாக உள்ளது.

ஒருபக்கம் அவமதிப்பையும் மறுபக்கம் அவன் மேன்மையை உணர்ந்த மேன்மக்களின் உறவையும் கர்ணன் அடைந்துகொண்டே இருக்கிறான்

சாமி