Saturday, December 12, 2015

சிரிப்பு


ஜெ

கடைசி அத்தியாயத்தில் காண்டீபத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் வர்ணனை கவித்துவமானது. அது பிரம்மனின் புருவம். அதன்பின்னர் மேகமாக வானவில்லாக சந்திரனின் ஒளிவட்டமாக அலையா பெரிதாகிக்கோண்டே செல்கிறது. கடைசியில் காண்டீபமாக வந்து விடுகிறது

ஆனால் அதை அர்ஜுனன் மீண்டும் சிறியதாக ஆக்கி மாங்காய் பறிக்கிறான். காண்டீபத்தால் மாங்காயை அடிக்கும் காட்சியில் ஆசிரியர் புன்னகை செய்வதுபோல தோன்றுகிறது. காண்டீபம் எதிர்பாராதபடி முடியும் இடம் இது. இப்படி ஒரு காட்சி காவியங்களிலே வரமுடியாது. மாடர்ன் நாவலில்தான் வரமுடியும். அதுதான் வெண்முரசின் சிறப்பு

ராஜாராம்