அன்புள்ள தி்ரு.ஜெ வணக்கம்.
விவாசயவேலைக்கு ஆள் கிடைக்காததால் களைக்கொல்லி உருவாக்கினார்களா? அல்லது களைக்கொல்லிகள் வந்ததால் வயலில் களையெடுக்க ஆள் தட்டுபாடு உருவாகியதா? நாணலை அழிக்கக்கூட களைக்கொல்லி வந்துவிட்டதை இரண்டாண்டுக்கு முன்புதான் அறிந்தேன். நாணல்கொல்லியை Sprayerல் ஊற்றி வெயில் ஏறுவதற்கு முன்பு நாணல் கண்ட இடத்தில் அடித்தால் அனல்பட்டு காய்ந்த இலைபோல நாணல் கருகிவிடும். இப்படி ஒரு கொடுமை தேவையா? என்று மனம் நினைத்தது. நாணலை அறுத்து எறியும்போது இப்படித்தோன்றவில்லை, மாட்டுக்காவது ஆகும் என்ற நினைப்பு அந்த எண்ணத்தை மடைமாற்றம் செய்துவிடுகிறது. மழைப்பெய்து ஒருவாரம் சென்றுப்பார்த்தால் இன்னும் அதிகமாக நாணல்கள். விவசாயியாக ஒரு வன்மம் தோன்றினாலும், மனிதனாக எழுந்த புன்னகையை மறைக்கமுடியவில்லை.
//சிவதர் “ஆம்” என்ற பின் சிரி த்து “தாங்கள் புன்னகையுடன் அக் கதையை கேட்டீர்கள். பரசுராமர் எ ன்றால் மழு எடுத்திருப்பார்” என ்றார். கர்ணன் “ஆம். சூதர்களை க ொல்வதற்காக பின்னும் சில முறை ப ாரதவர்ஷத்தை அவர் சுற்றி வரவேண் டியிருக்கும்” என்றான். அணுக் கர் உரக்க நகைத்து “மரங்களை வெ ட்டி வீழ்த்தலாம். நாணல்களை யா ரால் ஒழிக்க முடியும்? அவை பல் லாயிரம் கோடி விதைகள் கொண்டவை” என்றார்//
கர்ணன் கதையை ஏன் எழுதுகின்றீர்கள்? எங்களை வலியறிய வைக்க எழுதுகின்றீர்களா? பரசுராமன்போல் கர்ணன் மழுவெடுக்கப்போவதில்லை. நீங்கள் எழுதும் கர்ணன் கதையைப்படிக்கும் வாசகன் ஒவ்வொருவரும் கர்ணனுக்காக மழுவெடுப்பார்கள். எத்தனைபேரை வெட்ட முடியும். காடுகளை வெட்டுவதல் மூலம் அழித்துவிடலாம், நாணலை வெட்டுவதன் மூலம் அழித்துவிட முடியுமா?
கேலிக்கிண்டல் செய்து இழிவுப்படுத்தும் மனிதர்களை யாரால் அழித்துவிடமுடியும். புற்களும், நாணுலும் ஏன் முளைக்கிறது என்பது புற்களும், நாணலும் கூட அறிந்திருக்கபோவதில்லை.
தந்தை மகனை ஏளனப்படுத்துவது அவன் வளர்ச்சியை, விரிவை பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கமுடியாத இயலாமையில் தாழ்மையில் உருவாவது. மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் உருவாவது. எவனிடத்திலும் பணியாத தந்தை மகனுக்காக எவனிடத்திலும் பணிய தயங்குவதில்லை. ஆணை பணியவைக்க இறைவன் ஆணுக்கு மகனைத்தருகின்றான். அந்த பணிவே கனிவே மகனை பெரிதாக நினைக்கிறது. அந்த பெரியது கைக்கடங்காமல்போகும்போது ஏளனம் என்ற இகழ்சியின் மூலம் தனது சிறுமையை பெருமை எனக்காட்டுகிறது. ஒவ்வொரு தந்தையும் தன்மகன் தன்னை தூக்கி சுமக்கும்நாள் எது என்றே ஏங்குகிறார்கள். ஆனாலும் மகன் இன்னும் வளரவில்லையோ என்ற பயத்தோடன்தான் வாழ்கிறார்கள். அந்த பயமே அவர்களை மகனை ஏளனம் செய்யச்சொல்கிறது.
மனைவி கணவனை ஏளனப்படுத்துவது அவன் வளர்ச்சியால், விரிவால் தான் கரை ஒதுக்கப்படுவதால், வெளிச்சத்தால் விரட்டப்படும் நிழல்போல கணவனின் புகழ்வெளிச்சத்திற்கு அப்பால் சென்று ஒதுங்குவதால். வெளிச்சதை பகைக்கும் நிழல், அதனால் வெளிச்சத்தின் மூலமாகிய சூரியனை இகழ்கின்றது. சூரியன் இருட்டாக இருந்தால் நிழல் அதன்மீது படர்ந்து பிரியாமல் இருக்கலாம் அல்லவா?
கர்ணன்போன்ற மாபெரும் வளர்ச்சியும் புகழும் கொண்டவர்களுக்கு தந்தையும் மனைவியும் எதிர் திசையில் இருப்பது ஒருபக்கம் வலித்தாலும் அ்நத வலியின் வழியாகவே அவர்கள் வளர்ந்தும்போவார்கள். இது ஒருவிதத்தில் பெரும் சாபம்தான். சுளுக்கு விழுந்த கால் வலியில் துடிக்கவைக்கும். சுளுக்கு வழிக்கவேண்டும் என்றால் அதைவிட பெரும்வலியில் துடிக்கவேண்டும். கர்ணன் வாழ்க்கையில் தந்தையும் மனைவியும் சுளுக்காக இருக்கிறார்கள். சுளுக்கை வழித்தாலும் வலிக்கும். சரி சுளுக்கு இருந்துவிட்டுப்போகட்டும் என்றாலும் வலிக்கும். என்ன வாழ்க்கை இது.
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்.
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?-பாரதியார்.
எவ்வளவு அடிச்சாலும் தாங்க வைரநெஞ்சம் வேண்டும். வைரமாய் பிறந்ததாலேயே இடம்விடாமல் பட்டைத்தீட்டப்படுவதைப் பொருத்துக்கொள்ளவும் வேண்டும். கர்ணன் வைரம்தான்.
சாலையில் எச்சில் இலையில் சோறுதிங்கும் நாயைக்கட்டிக்கொண்டு “எனக்கு கொடுகாமல் நீ மட்டும் சாப்பிடலாமா?” என்று நாயின் எச்சிச்சோற்றை எடுத்துதின்ற அத்வைதியைக்கண்ட குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அத்வைதத்தில் அவரின் நிலை பெரும்நிலை என்றுகூறி. “அம்மா காளி! என்னை அந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடாதே” என்றாராம்.
கர்ணா! உனது உள்ளம் வேறு. வலிக்க வலிக்க வெட்டும் பரசுராமனால்கூட தாங்க முடியாத வலிதாங்குபவன் நீ. உனது வலி தாங்கும் இதயத்திற்காகவே நீ உணராத தெய்வம் உனக்கு தன்னை காட்டியே தீரும். கர்ணா உன்னிடம் வந்ததால் வலி வலியறியும்.
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா -அந்த
இடிபோல பிள்ளைவந்தால் மடிதாங்குமா?
குந்தி இடியைப்பெற்றதால் நதியில் விட்டாளோ?
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.