ஜெ
வெண்முரசின் கதைகளை வாசித்துக்கொண்டே செல்கிறேன். எல்லாகோணங்களிலும் கதையை வாசித்து எழுதிக்கொண்டே செல்லும் வாசகர்கடிதங்கள் இதைப் புரிந்துகொள்ள பேருதவிசெய்கின்றன. எத்தனை முகங்கள், எத்தனை ஊர்கள். வெண்முரசு ஒரு முகங்களின் கடல் என்று தோன்றுகிறது
நிருதன் என்னும் கதாபாத்திரம் முதல் பெயர் சொல்லப்படாத உதிரி ஏவலர்கள் வரை பல்வேறு சாமானியர்கள் இந்நாவல் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். அவர்களைப்புரிந்துகொள்வதுதான் இந்நாவலை அணுகுவதற்கு மிகமிகமுக்கியமானது என்று தோன்றுகிறது
இந்தச் சாமானியர்களைப்பற்றி தனியாகவே எவரேனும் ஆய்வுக்கட்டுரைகளைப்போல எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
சித்ரா