ஜெ,
வெண்முரசை கொஞ்சம் பின்னால் போய் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சத்யவதிக்கும் பராசர முனிவருக்குமான உறவைச் சொல்லியிருக்கும் அந்த மிஸ்டிக் அனுபவம் அற்புதமானது. அதை ஒரு சாதாரண பாலுறவாகவோ அல்லது சமூக சுரண்டலாகவோ சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் ஒரு நிதானமான கவித்துவத்துடன் கடந்து போகிறீர்கள்
இப்போது தோன்றுகிறது. அது ஆதி அன்னையும் தந்தையும் கொள்ளும் உறவு என்று. அது அப்படித்தானே இருக்கமுடியும்? அதுதான் எல்லா உறவுகளுக்கும் தொடக்கம் இல்லையா? ஆகவே அதை ஒரு கனவுபோல அமைப்பதே சரியாக இருக்கும்’
நதிகளின் அடித்தட்டு பற்றிய வர்ணனை எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்துக்கொண்டே வந்தேன். அதுவே ஒரு நல்ல வாசிப்பாக இருந்தது
சாமிநாதன்