ஜெ
கர்ணனின் தொடையைத் துளைக்கும் அந்த வண்டின் கதை முன்னரே பிரயாகையில் விரிவாக வந்துவிட்டது. அந்தக்கதையே புராணமாக மாற்றப்பட்டு அவனுக்கே சொல்லப்படுகிறது. மாறாதிருப்பது அந்த வலி மட்டுமே
கர்ணனும் மருத்துவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இயல்பாகவும் அழகாகவும் உள்ளன. ஒன்றும் செய்யமுடியாது என்பதை மிக விரிவாகவும் அழகாகவும் சொல்லும் மருத்துவர் ஒரு அருமையான குணச்சித்திரம்
ஏன் குளியலறைக்குள் கதை போகிறது என நினைத்தேன். ‘மையோ மரகதமோ மழைமுகிலோ அய்யோ இவன் வடிவென்பதுபோல் ஓர் அழையா அழகுடையோனை’ காட்டியாகவேண்டுமே
அழகான காட்சிகள், மீண்டும் ஒரு கனவுக்குள் வாழத்தொடங்கிவிட்டேன்
அருண்