ஜெ
இன்றைய வெய்யோனின்
தொடக்கவரியின் முரண்பாட்டில் உள்ள கவித்துவம் என்னை அதிலேயே நிற்கச்செய்துவிட்டது.
செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது? அவன் செங்கதிரின்
மகன். ஆனால் நிழலால் துரத்தப்படுகிறான். தொட்ர்ந்து வரும் வரிகளில் சூரியன் நிழல்களை
உருவாக்குபவனாகக் காட்டப்பட்டிருக்கிறான். அவனிடமிருந்து ஒளியை வாங்கி நிழலை உருவாக்கி
ஒளித்து வைத்துக்கொண்டு நின்றிருக்கின்றன பொருட்கள். அபாரமான கற்பனை
சாமிநாதன்