ஜெ
காண்டீபத்தைப்பற்றிய
சித்திரம் அற்புதமாக இருந்தது. அதன் mightiness எப்படி சுருங்கி ஒரு விளையாட்டுப்பொருள்
ஆகிறது என்னும் சித்திரம் அற்புதமானது. விளையாட்டுப்பொருளான அது எப்படி வளர்ந்து ஒரு
பெரிய கொலை ஆயுதமாகிறது என்றும் பார்ப்போம் என நினைக்கிறேன்.
காண்டீபத்தை அதன்
புரானங்களுடன் அறிமுகம் செய்வதுடன் அதை ராகவராமனின் சிவதனுஸுடன் உவமிக்கும் இடமும்
சிறப்பு. அவ்வாறு தெய்வங்களால் உருவாக்கப்படும் சில ஆயுதங்கள் மண்ணுக்கு வந்து விளையாடிச்செல்கின்றன
அப்படி விளையாடிச்சென்ற
ஓர் ஆயுதம்தான் சியமந்தகமும் என்று நினைக்கத்தோன்றியது
சரவணன்