Friday, December 11, 2015

குட்டிக்கதைகள்



ஜெ



தொடர்ச்சியாக வாசித்து இப்போதுதான் காண்டீபத்தைத் தொடங்கியிருக்கிறேன். காண்டீபத்தில் துணைக்கதைகள் குறைவு.குட்டிக்குட்டியாக வரும் துணைக்கதைகளை வெண்முகில்நகரத்தில் வாசிக்கும்போது என்னது இது கதைக்கு தடங்கலாக என்றுதான் அப்போதெல்லாம் தோன்றியது. ஆனால் பின்னர் சிந்திக்கும்போது உடனே நினைவுக்கு வருபவை எப்போதுமே அந்தச் சின்னச்சின்னக் கதைகள்தான் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது.

குட்டிக்கதைகள் மையக்கதைக்கு ஒரு கூடுதலான அர்த்தத்தை அளிக்கின்றன. பலகோனங்களில் அந்த கதையைச் சிந்திக்கவைக்கின்றன. நான் வாசித்தவரை குட்டிக்கதைகள் முதற்கனவிலும் வென்முகில் நகரத்திலும்தான் நிறைந்திருந்தன .அந்நாவல்களின் உள்விரிவு மிக அதிகம். அவை மல்ட்டி லேயர்ட் டெக்ஸ்ட் களாக இருந்தன

மகாபாரதத்தின் மையப்பகுதி முழுக்க இதேபோல குட்டிக்கதைகள். அவற்றை முழுமையாகச் சொல்வீர்கள் என நினைக்கிறேன்

செல்வா