Tuesday, December 8, 2015

நீலங்கள்



ஜெ

இந்திரநீலம் வாசிக்கும்போது எட்டு கோணங்களில் மீண்டும் நீலம் நாவலையே வாசித்ததுபோலத்தான் தோன்றியது. அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்திரநீலம் நீலனை இந்திரனின் லீலைகொண்டவனாக காட்டுகிறது என நினைத்துக்கொண்டேன்’

எட்டு நாயகிகளும் எட்டு வகைகளில் கிருஷ்ணனை வந்தடைகிறார்கள். கிருஷ்ணன் அவர்களை காக்கவைப்பதும் கைப்பிடிப்பதும் அற்புதமாக அமைந்துள்ளது. அதில் உச்சமானது ருக்மிணியின் இடம்தான். அவள் வாழும் விதர்ப்பநாட்டின் சேறும் மழையும் எல்லாம் சேர்ந்து எங்கோ ஓர் உலகில் போய் வாழ்ந்து வந்ததைப்போல உணரவைத்தன

ருக்மிணியின் உணர்ச்சிவேகமும் அவள் தாதியின் பிரார்த்தனையும் மனதைக்கசிய வைத்தன.

எஸ்