Wednesday, December 9, 2015

பெண்கள்



ஜெ

இந்திரநீலம் காண்டீபம் இரண்டுமே பெண்களின் கதைகளாக வருகின்றன. அந்த நுட்பங்களை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒருமாதிரி இருக்கிறாள். உலூபி அர்ப்பணிப்புள்ளவள். காளிந்தியைப்போலத்தான் அவளும் இருக்கிறாள். பாஞ்சாலி,சத்யபாமா, சுபத்திரை ஆகிய மூவரும் ஒரே ரகம். தேவயானியும் நக்னஜித்தியும் சித்ராங்கதையும் ஒரே மாதிரி. சுஃப்ரையும் சுபகையும்கூட ஒரே கதாபாத்திரங்களின் இரண்டு மாடல்கள்.

ஆனால் ஒவ்வொருவரும் நுணுக்கமாக மாறவும் செய்கிறார்கள். பாஞ்சாலியிடம் இருக்கும் அரகன்ஸ் சுபத்திரையிடம் இல்லை. ஆனால் பாஞ்சாலிக்கு அர்ஜுனன் மேல் மோகம். சுபத்திரைக்கு அப்படி மோகமெல்லாம் இல்லை. சுப்ரை திருஷ்டதுய்ம்னனுக்கு அர்ப்பணமாகிறாள். ஆனால் உறுதியான பெண்ணாக இருக்கிறாள். ஆனால் சுபகை அப்படி இல்லை. அவள் மென்மையான அழக்கூடிய பெண்

இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம். நுணுக்கங்கள் ஒருபக்கம். பொதுவான அம்சங்கள் ஒரு பக்கம். வாழ்க்கைபோலவே நுட்பமானது இந்த நாவல்

ப்ரியா