அன்புள்ள ஜெமோ,
வெய்யோனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். தொடக்கமே உத்வேகமூட்டுவதாக இருந்தது. பொதுவாக வெண்முரசு நாவல்களின் தொடக்கம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. எனக்குப்பிடித்த தொடக்கமென்பது பிரயாகையின் தொடக்கத்தில் வரும் துருவனின் கதைதான். அதேபோன்ற ஒரு ஆக்ரோஷமான தொடக்கம் இதுவும்
பரசுராமனுக்கும் கர்ணனுக்கும் உள்ள ஒற்றுமை இப்போதுதான் கண்ணுப்பட்டது. இருவருமே அன்னை என்னும் உறவின் சிக்கலுக்குள் சிக்கியவர்கள். அனல் போல வாழ்நாளெல்லாம் எரிந்துகொண்டிருந்தவர்கள். பலவகையிலும் ஆழமான தொடக்கம். கர்ணன் எவர் என்று சொல்லிவிட்டது
நடையும் இப்போது உங்களுக்கும் எங்களுக்கும் பழகிவிட்டது. உடனே எளிதாக உள்ளே செல்லமுடிந்தது
சாரங்கன்