ஜெ
மகாபாரதத்தின் அமைப்பில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை ஒருவர் கூறியிருந்தார். அது சிதறிச்சிதறி வளர்ந்துகொண்டே இருப்பது. அதனால்தான் அதை அலையடிக்கும் கதைக்கடல் என்று சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக மகாபாரதத்தை நவால்களாக எழுதியவர்களெல்லாருமே அதன் அந்த சிதறிவிரியும் அம்சத்தை இல்லாமலாக்கித்தான் எழுதியிருக்கிறார்கள். வெண்முரசு தான் அந்த வடிவத்தை அடைந்திருக்கிறது
அதற்கு உதவுபவை சின்னச்சின்னக் கதைகள். திருஷ்டதுய்ம்னனின் கதைக்கு விருத்த கன்யகை கதை எந்த அளவுக்கு காண்டிரிபியூட் செய்கிறது என்பதை உடனடி வாசிப்பிலே கண்டுபிடிப்பது கஷ்டம் ஆனால் கொஞ்ச நாள் போனதும் அதுதான் நினைவிலே நிற்கிறது. அதைத்தான் வெண்முரசின் வடிவம் என்று நான் நினைக்கிறேன். யூனிட்டியை விட இந்த சிதறல்தான் அழகானது. கடலை நாம் முழுசாகப்பர்த்துவிடக்கூடாது இல்லையா?
ஜெயராமன்