Wednesday, December 16, 2015

அஸ்தினபுரி மீண்டும்


ஜெ

துவாரகையின் வர்ணனையே பிற நகரங்களை மறக்கவைத்துவிட்டது. அதன் பின்னர் இந்திரப்பிரஸ்தமும் எல்லாவற்றையும் மறக்கவைத்துவிட்டது. இப்போது மீண்டும் இந்திரப்பிரஸ்தத்தை கடந்து அஸ்தினபுரி என்று ஒருநகரம் இருந்தது என்பதையே நினைக்கமுடியாதவனாக ஆகிவிட்டேன். நீங்கள் விட்ட இந்த இடைவெளியில் மழைப்பாடலை மீண்டும் வாசித்தேன். ஒரு பெரிய ஏக்கம் வந்தது. இனிமேல் அஸ்தினபுரி வருமா என்று. ஆனால் வரத்தான் போகிறது என்பது தெரிகிறது.

அஸ்தினபுரிதானே நகரங்களுக்கெல்லாம் அன்னை. அதன் பழைமை ஒரு பெரிய விஷயம். மேலும் வெண்முரசு ஆரம்பித்தபோது எத்தனை பக்கங்களில் அந்த நகரம் அதன் தெருக்கள் திரும்பத்திரும்ப அதன் முற்றம் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். அந்தக்கனவு மீண்டும் வரவேண்டும் என நினைக்கிறேன் காத்திருக்கிறேன்

ஜெயராமன்