அன்புள்ள ஜெ
இதுவரை நேமி என்ற வார்த்தையே கிருஷ்ணனுடையதாக இருந்தது. இந்த நாவல் திடீரென்று அதை நேமிநாதருக்கும் உரியதாக ஆக்கிவிட்டது. சக்கராயுதம் ஏந்தி உலகை அழிக்க வந்தனுக்கும் சக்கரத்தை கடந்துசெல்ல வந்தவனுக்கும் நடுவே ஒரு அர்த்தபூர்வமான இணைப்பு நடந்துள்ளது.
சமணமதத்தில் நேமிநாதர் அதிகமாக வழிபடப்படுவதில்லை என்று நினைத்திருந்தேன். இந்தப்பக்கமெல்லாம் வர்த்தமானரும் பார்ஸ்வநாதரும்தான் அதிகமாக காணப்படுகிறார்கள். ஆனால் இணையத்தில் போய்ப்பார்த்தபோதுதான் குஜராத்தில் நேமிநாதர் வழிபடப்படுவதுதெரிந்தது
அது கிருஷ்ணனின் மண் என நினைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. சக்கரதாரி என்றால் இனிமேல் சமணத்தையும் சேர்த்தே நினைப்பேன்
இந்த இணைப்புக்கு நன்றி
சாமிநாதன்