Wednesday, December 16, 2015

பெண்ணாதல்





ஜெ

வெண்முரசில் சித்ராங்கதையைத்தான் நான் மிக நெருக்கமாக உணர்ந்தேன். அவள் ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறுமிடம் எனக்கும் ஒருவகையில் நெருக்கமானது. நான் ஒரு ஸ்போர்ட்ஸ் கேர்ல் ஆக இருந்தேன். அப்போதெல்லாம் பெண்ணாகவே என்னை எண்ணிக்கொண்டதில்லை. பெண்ணாக எண்ணிக்கொண்டது ஒரு கட்டத்திலேதான். சொல்லப்போனால் இலக்கியத்தில். ஜெயகாந்தனின் பாரீஸுக்குப்போ நாவலில் சாரங்கன் தான் என்னை நான் ஒரு பெண் என்று காட்டியவன்

எல்லா பெண்களும் ஆணாக இருந்து இப்படி ஒரு புள்ளியில் பெண்ணாக மாறிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். அப்படி ஒரு நுட்பமான புரிதலை அளிப்பதாக இருந்தது காண்டீபத்தின் அந்தப்பகுதி. பலமுறை அந்த மனோவியல்விளையாட்டை கூர்ந்து வாசித்தேன்.

ஜா