Wednesday, December 23, 2015

முதல்வரிகள்

 
 
“செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது?"
 
.. இது இன்று ஆரம்பித்து இருக்கும் வெய்யோனின் முதல் வரி..
 
முதல் வரியிலே கர்ணனின் முழு கதையையும் உணர்ந்த திருப்தி ஏற்படுகிறது..
 
இதே போல் மற்ற நாவல்களின் (எனக்கு பிடித்த)  முதல் வரியையும் நினைவு கூர்ந்தேன்..
 
ஏறக்குறைய நாவலின் முழு சாரதையும் சொல்லி விடுகின்றன அந்த முதல் வரிகள்
 
 உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ" இது நீலத்தின் முதல் வரி
 
"விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை" இது பிரியாகையின் முதல் வரி
 
 
"முகிலில் எரிகிறது அழியா நெருப்பு" - இது வெண்முகில் நகரத்தின் முதல் வரி..
 
ரகுராமன்