இன்று முழுக்க
நான் வெண்முரசு மழைப்பாடலைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் இந்திரநீலம்
காண்டீபம் வரை வந்தபிறகும்கூட மழைப்பாடலின் grandeur தான் மனதில் நிற்கிறது. அதன் பயங்கரமும்
அழகும் தனியான ஒரு அனுபவம். எங்கோ போய் வாழ்ந்து வயசாகி திரும்பிவந்ததுபோல இருக்கிறது.
அதில் வரும் பாலைவனச்சித்தரிப்பும் சரி அதில் உள்ள பல்வேறு கவித்துவமான குறிப்புகளும்
சரி ஊடாக ஓடும் துணைக்கதைகளும்சரி அற்புதமானவை. புனைவெழுத்து என்றால் என்ன என்று காட்டுபவை
வாழ்த்துக்கள்
ராஜாராம்