அன்புள்ள ஜெமோ
நலம்தானே
வெய்யோன் முதல்
அத்தியாயத்தின் வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போதைக்கு அது தெரிந்த கதை என்பதனால்
வரிகளே முக்கியமானது. வரிகள் எங்கெல்லாம் கர்ணனைச் சுட்டிக்காட்டுகின்றன என்பது. பெரும்பாலும்
எல்லா வரிகளுமே கர்ணனைச்சுட்டிக்காட்டின
கர்ணனின் ஒளியே
அவனுக்கு எதிரே வரும் அத்தனைபேரும் நிழலை ஒளித்துக்கொண்டு அவனிடம் பேசுவதற்குக் காரணமாக
அமைகிறதா என்ன? அவனிடம் எதிர்நின்று பேசும் ஒவ்வொருவரும் அவனால் மொழியால் தீண்டமுடியாத
நிலையில் இருக்கிறார்கள் இல்லையா?
இரண்டாம் அத்தியாயத்தின் வண்டு இங்கே ஒரு deity ஆக உருமாறுவதன் அதிசயத்தை கவனித்துக்கொண்டிருக்கிறேன். மகாபாரதத்தின் சிறப்பம்சமே இதுதான். எல்லாமே ஏதோ ஒரு தெய்வம்
அருண்