அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
காண்டீபம் நாவல்
படித்தது ஒரு இனிமையான அனுபவமாய் இருந்தது.நாகர்லோகமும் ஏழு
சக்கரங்களும்,மணிப்பூரில் ஆண்மை பெண்மை என்று ஒரே உடலிலே இரு தன்மைகொண்டு
முழுமைஅடையும் இடா,பிங்களையும்,முதலைகளும் பஞ்ச பிராணன்ங்களும் என்று நாவல்
முழுதும் யோக மயம்.இவை அனைத்தும் கடந்தது அர்ஜுனன் ,ஆனால் முழுமைஅடைந்து
நாவலின் உச்சபாத்திரமாய் உள்ளவர் அரிஷ்டனேமி,அர்ஜுனன் போல ஆகவேண்டும் என்று
கதைகேட்ட சுஜயன் இப்போது நேமி நாதர் போல
ஆகிக்கொண்டுள்ளான்,இனி
அர்ஜுனன் தான் சுஜயன் போல ஆக முயற்ச்சிக்கவேண்டும்,அர்ஜுனன் நேமி நாதர் போல
ஆவானா? கண்டீபத்தில் நேமி நாதர் துவாரகை தாண்டி செல்லும் போது இடம்பெற்ற
வரிகளே இதற்கு பதிலாகும்"வாயில் திறந்தே தான் உள்ளது, அதை கடப்பது அவர்
அவர் கைகளில்,ஆனால் பலரும் உறவால்,காலத்தால்,ஊழால் தளையிடபட்டுள்ளனர்" .
அர்ஜுனனும்,திரௌபதியும்
ஒருவர்மீது ஒருவர் possessive ஆக உள்ளனர்,ஒருவர் மாறி ஒருவர்
சீண்டிபார்க்கீன்றனர், நாவல் தொடக்கத்தில் தர்மன் அறை கதவை தட்டியபோது உடை
கலைய அர்ஜுனன் முன் வந்து நின்று வெறுப்பேற்றினாள் திரௌபதி,இப்பொழுது
அர்ஜுனன் முறை சுபத்திரை மேல் அதிக அன்பு வைத்திருப்பதாக திரௌபதியிடம்
காட்டுகிறான்.
இந்திரபிரஸ்தம் உங்கள் வர்ணனையில் கண்முன்
விரிகிறது பிரம்மாண்ட நகரம்,எங்கு பார்த்தாளும் திரௌபதியே தெரிகிறாள்,நகர்
நுழைகையில் கொற்றவை உருவில் நின்ற கோலம்,அரசவையில் அரியணை வடிவில் அமர்ந்த
கோலம்,வைத்திய சாலையில் கிடந்த கோலம் ,அப்பா இப்படி ஒரு ஆளுமையா என்று
வியக்கவைக்கிறாள் பாஞ்சாலி.தான் விரும்பும் வகையில் ஒவ்வொரு அங்குலமாய் தன்
நகரை அமைக்கிறாள்,அதன் மேல் சிறிதும் அக்கறை காட்டாத தருமன் நாளை
சூதாட்டதில் நகரை வைத்து இழந்தால் என்னவாகும்,தருமன் மீதும் துரியன்
மீதும் எழும் திரௌபதியின் கோபத்தையும் வஞ்சத்தையும் இப்போழுதே
யூகிக்கமுடிகிறது.
அடுத்த நாவலுக்கு வாழ்த்துக்கள்
இப்படிக்கு
குணசேகரன்.