Sunday, December 20, 2015

நீலத்தின் பித்து



அன்புள்ள ஜெ



மகத்தான எழுத்து என்பது அந்த ஆசிரியனை விழுங்கி உருவாவது என்று சொல்வார்கள். அப்படித்தோன்றியது நீலம்தான். நீலத்தில் உள்ள கிறுக்கும் வெறியும் வேறெந்த நாவலிலும் முழுமையாக இல்லை. அவ்வப்போது இந்திரநீலத்திலும் காண்டீபத்திலும் வந்து போயிற்று அவ்வளவுதான். அற்புதமான மொழியாட்சி. இந்நாவல் அளிக்கும் நுட்பங்களை இன்றைய சூழலில் தமிழ் இலக்கியவாசகர்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கமுடியாது. இவர்கள் இன்னமும் மாடர்னிஸத்திலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள். Objective reality யை இவர்களின் பிரக்ஞை தாண்டுவதில்லை.

ஆகவேதான் அரசியல்கருத்துக்களையும் emotional content களையும் மட்டும் வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம்பேர் மேலே போய் structural unity யின் அழகை ரசிக்கிறார்கள். படைப்பில் உருவாகும் sublime க்கு தமிழில் மிகமிகக்குறைவாகவே வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு உரியநாவல் நீலம்

ராமநாதன்