Monday, December 14, 2015

சித்ராங்கதை



ஜெ

வெண்முரசு கலையாமல் கூடவே இருக்கும் ஒரு கனவுபோல உள்ளது. அர்ஜுனனின் மனைவிகளைப்பற்றி நான் பெரிதாக வாசித்ததில்லை. உலூபி சித்ராங்கதை பற்றி எல்லாம் மகாபாரதக்கதைசொல்லிகள் சொல் வதில்லை. சித்ராங்கதை இன்றைக்குள்ள மணிப்பூரைச்சேர்ந்தவள் என்பதே எனக்குப் புதிய செய்தி. ஆனால் அதைக் கற்பனைசெய்துபார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அத மிதக்கும் தீவுகள் உள்ள ஏரி இன்றைக்கும் இருக்கிறது என்பதறிந்து திகைத்தேன்

உலூபியும் சித்ராங்கதையும் இரண்டு வார்ப்புகள் உலூபி காட்டுப்பெண். அர்ப்பணிப்புள்ளவள். சித்ராங்கதை அப்படி இல்லை. அவள் அரசி. ஆயுதவித்தை படித்தவள். அவள் அவனிடம் மட்டும்தான் பெண்ணாக இருக்கப்போகிறாள். அவளுக்கு பிறந்த மகனுக்கும் அம்மாவாக இருப்பாள்

அவர்கள் இருவரும் ஆடும் அந்த ஆண்பெண் ஆட்டமே ஒரு தனிநாவல் போல. டிவைன்

சேகர்