ஜெ
அடுத்த நாவலுக்காக எதிர்பார்த்திருக்கிறேன். மகாபாரதத்தைப்பற்றி நினைக்கையில் அது காடுகளின் கதை என்ற மனப்பிம்பம் எனக்கு இருந்தது. இல்லை அது நகரங்களின் கதை என்று வெண்முரசு காட்டிவிட்டது. அஸ்தினபுரியும் காம்பில்யமும் துவாரகையும் இப்போது இந்திரப்பிரஸ்தமும் கண்ணுக்குள் நிற்கின்றன. இதைத்தவிர எத்தனை சிறிய ஊர்கள், நகரங்கள்
பாரதவர்ஷத்தையே கண்முன் காட்டுகிறது வெண்முரசு. நகரங்களில் எல்லாம் போய் கொஞ்சநாள் வாழ்ந்து வந்ததுபோல ஒரு மனப்பிரமை. அதுதான் இந்நாவல்வாசிப்பின் மிகச்சிறந்த கொடை
செந்தில்