Sunday, December 13, 2015

போர்களின் கதை

ஜெ













வெண்முரசு நாவல்கள் மேலும் மேலும் தீவிரமடைந்தபடியே போகின்றன. ஆரம்பநாவல்களில் இருந்த மொழி மேலும் செறிவாக ஆனபடியே போகிறது. ஒரு பெரிய சித்திரம் உருவாகி வந்திருக்கிறது. அது ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் மக்கள் தங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரு சமூகமாக ஆகுவது. அதன்பின்னர் மற்றநாடுகளுடன் போராடுவதற்காக ஒரு நாடாக மாறுவது. அந்த நாடுகளுக்கும் மற்றநாடுகளுக்கும் உள்ள உறவும் பகையும். அதில் சில நாடுகள் பேரரசுகள் ஆக ஆகுவது. அப்படி பேரரசாக ஆகும் நாடு வணிகத்தையோ புதிய நிலங்களையோ நம்பியிருக்கிறது. பழைய பேரரசுகள் வளரமுடியாமல் வீழ்ச்சி அடைகின்றன

இந்தப்பிரம்மாண்டமான சித்திரத்திலே ஒவ்வொரு கதையும் தனிப்பட்டமுறையில் எப்படி போய் ஒன்றாகின்றன என்பதைத்தான் வெண்முரசிலே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். பெரிய கதைகள் சிறிய கதைகள் எல்லாம் அந்த ஒற்றைப்பெருங்கதைக்குள் தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அது பாரதத்தின் கதை. அல்லது ஒற்றைப்போரின் கதை

சாரதி